Published on 13/04/2019 | Edited on 13/04/2019
ஆண்ட்ராய்டு ப்ளேஸ்டோரில் இருந்து 33,000 ஆபத்தான செயலிகளை நீக்கியுள்ளதாக சீனாவின் சி.ஏ.சி (சீன இணையவெளி நிர்வாகம்) அமைப்பு அறிவித்துள்ளது.
வன்முறை, சூதாட்ட விளையாட்டுகள், குழந்தைகள் மன நிலையை பாதிக்கும் விளையாட்டுகள் உள்ளிட்ட 33,000 செயலிகள் ஆபத்தானவையாக கருதப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதற்கான தணிக்கையில் ஈடுபட்ட சி.ஏ.சி தற்போது ஆபத்தான செயலிகளை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 23 லட்சம் இணையத்தளங்களும், சமூக வலைதளங்களில் சீர்கேடுகளை உருவாக்கும் 2.47 கோடி பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 30 லட்சம் சமூகவலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.