CHINA

முதன்முதலில் கரோனாபரவிய நாடானசீனாவில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கரோனாபரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அண்மைக்காலமாக அந்தநாட்டில்மீண்டும் கரோனாபாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனையடுத்துஜீரோ கரோனாஅணுகுமுறையை பின்பற்றும் சீனா, கரோனாபரவும் பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அதன் பரவலைக் கட்டுப்படுத்திவருகிறது.

Advertisment

இந்தநிலையில் சீனா நேற்று, 35,700 பேர் வசிக்கும்எஜின்பகுதியில் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்பகுதியில் ஒருவாரத்தில்150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியானதையடுத்து சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தநிலையில்இன்று, 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோவ்நகரில் சீனா ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

Advertisment

வீட்டிற்குள்ளேயேஇருக்கும்படிலான்ஜோவ்நகர மக்களை அறிவுறுத்தியுள்ள சீன அதிகாரிகள், அவசர தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அக்டோபர் 17 ஆம் தேதியிலிருந்து இன்றுவரைஅந்த நகரில் 39 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டதையடுத்து சீனா இந்த ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது.

சீனாவில் அக்டோபர் 17 முதல் இன்றுவரை198 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. தற்போது சீனாவில் அதிகரித்து வரும் கரோனாபாதிப்புக்கு டெல்டா வகை கரோனா காரணம் எனச் சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.