கடலூர் மாவட்டம், விருத்தாசலம் இரட்டை தெரு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிசான் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வேப்பூர் அடுத்த ஆவட்டியில் உள்ள அவரது உறவினரின் வட்டி கடையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர், ராஜஸ்தானில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த கிசான், நேற்று காலை விருத்தாசலம் ரெயில்வே சந்திப்பு அருகே மங்களூரிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் தோல்வியால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!
Advertisment