Skip to main content

வெற்றியைத் தந்த மக்களுக்கு வினோத முறையில் நன்றி செலுத்தும் இளைஞர்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Young man who gives strange thanks to the people who gave him success

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எம் .குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தம்பிதுரை அந்த கிராமத்திலேயே சொந்தமாக ஸ்டூடியோ வைத்து அப்பகுதி சுற்றுப்பட்டு கிராமங்களில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வீடியோ புகைப்படம் எடுத்துத் தருபவர். அதோடு தினசரி பத்திரிக்கைகளை ஏஜென்சி எடுத்து அவரது கிராமப் பகுதியில் விநியோகித்து வருகிறார். இந்தப் பணிகள் ஒரு பக்கம் அதோடு பொதுமக்களுக்கான தேவைகளை நேரம் காலம் கருதாமல் சேவை மனப்பான்மையோடு செய்து வருபவர்.

 

உதாரணத்திற்கு கரோனா நோய் கடுமையாக இருந்த நாட்களில் தடுப்பூசி முகாம்களைத் தனது ஊரில் நடத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைத்து அவர்களோடு இணைந்து பணியாற்றியவர். அதோடு கரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு மக்கள் பயந்து தயங்கினார்கள், அப்போது தம்பிதுரை தடுப்பூசி போட வரும் அனைவருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை தன் சொந்த செலவில் வாங்கி அன்பளிப்பாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். இதனால் பலரும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தம்பி துறையின் செயல்பாடுகளை கண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இது மட்டுமல்ல ஊரில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை பாம்பு கடித்து விட்டது போன்ற அசம்பாவிதம் நேரும் போது உடனடியாக சென்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என மக்கள் பணியில் நேரம் காலம் பாராமல் செய்து வருகிறார் தம்பித்துரை.

 

Young man who gives strange thanks to the people who gave him success

 

இந்த நிலையில் மக்கள் பணியை மேலும் தொடர சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது பகுதியில் உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். மேலும் சிலர் போட்டியிட்டனர், அதனால் கடும் போட்டி நிலவியது. இருந்தும் 55 வாக்கு வித்தியாசத்தில் தம்பித்துரையை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக அப்பகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த தம்பித்துரை வித்தியாசமான ஒரு செயலை செய்துள்ளார். அது குறித்து அவரிடம் கேட்டபோது,  “திருமணமாகி மனைவி பிள்ளைகள் என என் குடும்பம் விரிவடைந்தது. அவர்களைக் காப்பாற்ற கிராமத்திலேயே போட்டோ ஸ்டூடியோ துவக்க முடிவு செய்தேன். அதற்கு முதலீடு செய்ய என்னிடம் பணம் இல்லை எங்கள் பகுதியில் இருந்த பல்லவன் கிராம வங்கி மேலாளர் நிர்மல் குமார் அவர்களிடம் சென்று வங்கி கடன் உதவி தருமாறு கேட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து மூன்றரை லட்சம் கடன் வழங்கினார்.

 

நாணயமான முறையில் அந்தக் கடனை திருப்பி செலுத்தினேன். பிறகு உள்ளாட்சித் தேர்தல் வந்தது என் கிராமம் மக்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதன் காரணமாக தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை 55 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்களுக்கு என்றும் நான் நன்றிக் கடன்பட்டவன். அந்த நன்றியை அவர்களுக்கு செலுத்தும் விதமாக ஒரு கார் வாங்கி உள்ளேன். இந்த கார் என் கிராம மக்களில் யாருக்காவது பிரசவம், திடீர் உடல் நிலை கோளாறுகள் நேரும்போது அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று  காப்பாற்றும். இப்படிப்பட்ட இன்றியமையாத பணிகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் எனது காரில் எனது வாழ்க்கையில் ஒளி பெற செய்த பல்லவன் வங்கி மேலாளர் நிர்மல் குமார் அவர்களின் பெயரை எழுதி வைத்துள்ளேன். அது அவருக்கு நான் காட்டும் நன்றி. அதே போன்று எனக்கு வாக்களித்த எனது கிராம மக்களுக்கு எனது நன்றி காணிக்கையாக இந்த இலவச சேவைக்கு இந்த கார் பயன் படுத்தப்படும்” என்கிறார் தம்பித்துரை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரதமரின் வாகனப் பேரணி - ஏற்பாடுகள் தீவிரம்! (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 09/04/2024

 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், தேதி நெருங்கி விட்டதால் பிரச்சாரத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை வரும் பிரதமர், தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். அதைமுன்னிட்டு அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

Next Story

'இனி பெயர் மட்டும்தான் தங்கம், தங்கப்பன் என வைக்க முடியுமே தவிர வாங்க முடியாது' -திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Now only the name is gold, you can only name as Thangapan but you cannot buy gold' - Dindigul Srinivasan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி சிந்தலவாடம்பட்டி ஊராட்சி, ராமபட்டினம், புதூரில் அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான முஹம்மது முபாரக்கை ஆதரித்து  திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல்  சீனிவாசன் பேசுகையில், 'ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கழகம் என்ன ஆகுமோ என்ற நிலை இருந்தது. ஆனால் ஏகோபித்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அன்பினால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற துரோகிகளை வென்று கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார் ஜெயலலிதா இருந்தபோது கூட சட்டசபையில் 67 சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் பெற முடிந்தது. எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 75 சட்டமன்ற உறுப்பினர்களை கழகம் பெற்றது. திமுக தேர்தலுக்கு முன்பாக 520 வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பாலும் தேனும் ஆறாக ஓடும் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதே போன்றுதான் தற்போதும் திமுகவின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் சாத்தியம் இல்லாத நிறைவேற்ற முடியாத திட்டங்களை வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், தாய் சேய் பெட்டகம்,அம்மா கிளினிக்குகள், மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதோடு அரிசி, பால், பருப்பு விலை கடுமையாக உயர்ந்து விட்டது. சொத்து வரியை உயர்த்தி விட்டது. மின் கட்டணம் பன்மடங்காக உயர்த்தி விட்டது. மாநில அரசுதான் இந்த கொடுமை என்றால் மத்திய அரசு அதைக் காட்டிலும் கொடுமையாக உள்ளது. இனி சாமானியமான மக்களால் தங்கம் வாங்க முடியாது. தங்களது பிள்ளைகளுக்கு தங்கப்பன் தங்கம்மாள், தங்கம் என பெயர்தான் வைக்க முடியும். எனவே, இந்த மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கு அச்சாரமாக வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அமோக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.