Skip to main content

‘பகுத்தறிவு’ தலைவர்கள் நலம்பெற இறைவழிபாடு!- காற்றில் பறக்கிறதா கொள்கை?

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

தனது கொள்கைப்படி ஒருவர் தாராளமாக வாழ்ந்துகொள்ளலாம். அதுபோலவே, அதற்கு மாறான கொள்கையுடன், நம்பிக்கையை ஒரு பிடியாக வைத்துக்கொண்டு, மற்றவர்களும் வாழலாம். இந்தக் கொள்கையும் நம்பிக்கையும், புரிதல் இல்லாதவர்களால் அவ்வப்போது உரசிக்கொள்கின்றன.  விமர்சனத்துக்கும் ஆளாகின்றன.  அப்படி நடந்துவரும் அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்!

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

கலைஞர் உடல் நலிவுற்றிருந்தபோது, திமுக தொண்டர்கள் சிலர் கூட்டு இறைவழிபாடெல்லாம் நடத்தினார்கள். அப்போது, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ‘கலைஞரை மதிப்பது, அவர் கட்டிக்காத்த கொள்கையை மதிப்பதே ஆகும். மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையால் கலைஞர் நலம்பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபட வேண்டாம்.’ என்று கேட்டுக்கொண்டார்.

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

பகுத்தறிவுக் கொள்கையை முழுமூச்சாகக் கடைப்பிடித்துவருபவர் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி. கரோனா தொற்றிலிருந்து அவர் மீண்டுவர இறைவனைப் பிரார்த்திப்பதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கமல்ஹாசனும் இறைமறுப்பு கொள்கையில் உறுதியாக உள்ளவர். அவர் பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். திருவொற்றியூரிலோ, மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர், எல்லையம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று பாலபிஷேகம் நடத்தினர்.

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நம்பியூரில் அரசு பள்ளி வகுப்பறையின் கரும்பலகையில் பேனர் கட்டி, திமுகவினர் சிலர் பூஜை செய்துள்ளனர்.

 

தங்களின் மீதான அன்பால் சிலர் பிரார்த்தனை செய்ததிலோ, பாலாபிஷேகம் நடத்தியதிலோ, பூஜை செய்ததிலோ, கி.வீரமணிக்கோ, கமல்ஹாசனுக்கோ, உதயநிதிக்கோ சிறிதும் உடன்பாடு இருந்திருக்காதுதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டு, ‘தலைவர்களின் கொள்கை காற்றில் பறக்கிறதே!’ என்று நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

‘கடவுள் நம்பிக்கை இல்லை’ என்ற கொள்கை உள்ளவர்களும்கூட, அந்தக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்களே! ஒருவருடைய வாழ்க்கையில் நம்பிக்கையானது மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. இறைவழிபாடு நடத்துபவர்களுக்கோ,  அந்த நம்பிக்கை பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்கிறது. பிரார்த்தனைதான், தங்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் நற்பண்புகளை வளர்ப்பதற்குமான பிரதான கருவி என்பதில், அவர்களும் உறுதியாக இருக்கின்றனர். பொதுவாக நம்பிக்கை என்பது, தங்களுக்குத் தேவையானது கிடைக்கும் என்ற புரிந்துணரலே ஆகும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.