கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவிவருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில், திரையரங்கில் 100 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனைப் பரிசீலனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அனுமதியை வழங்கி அரசாணை ஒன்றை நேற்று பிறப்பித்தார். இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துவந்தனர். 'இது, கரோனாபரவுவதற்கான ஹாட்ஸ்பாட்டாகமாறிவிடும்' எனவும், 'அரசின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' எனவும்மருத்துவர்கள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகதலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகசெயலாளர் அஜய் பல்லா கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார். அதில், "கரோனாதடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியிட்டவழிமுறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். உள்துறை அமைச்சகத்தின் கரோனா நடவடிக்கைகளைநீர்த்துப்போகும் அளவில் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது. திரையரங்குகளில்50 சதவிகித இருக்கைகளுக்குமட்டுமே அனுமதி என்ற வழிகாட்டுதலையேபின்பற்றவேண்டும். திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளை அனுமதித்தஉத்தரவைத் திரும்பப்பெறவேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.