தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 30,055 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 30,215 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 30,039 பேர் தமிழகத்திலும், மீதம் உள்ள 16 பேர் வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி ஒன்று கரோனா பாதிப்பு 1,48,469 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,,282 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
சென்னையில் மட்டும் இன்று 6,241 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 6,383 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கம், வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (ஜனவரி 27ம் தேதி) ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக்குப் பிறகே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பான தகவல்கள் தெரியவரும்.