Skip to main content

''150 பேருக்காக எந்த மாட்டுக்காரனாவது காளையை அவிழ்த்துவிடுவானா?''-எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆதங்கம்!  

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

 Will any cowherd untie a bull for 150 people? -Author Rama Velamurthy Adangam!

 

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருந்தது அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும் போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்பொழுது பேசிய அவர், ''தமிழகத்தின் பாரம்பரியத்தையும் குறிப்பாகத் தென் பகுதியான மதுரையின் கலாச்சாரத்தை ரொம்ப ஆழமாக பதியவைக்கும் திருவிழா ஜல்லிக்கட்டு. தை மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. அதற்கு அடுத்த நாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த கலாச்சார திருவிழாவை கரோனாவை காரணம்காட்டி தடை செய்கிறார்கள். இந்த வருடமும் நடக்கவில்லை. கரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒன்று தடை செய்ய வேண்டும். இது 10 பேர், 100 பேர் பார்க்கக்கூடிய திருவிழா அல்ல, ஆயிரக்கணக்கான பேர் திரள, மக்களுடைய அத்தனை சந்தோஷத்திற்குமான திருவிழா. ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்துள்ளது. 150 பேர் மட்டும் பார்வையாளர்கள் என தெரிவித்துள்ளது.

 

 Will any cowherd untie a bull for 150 people? -Author Rama Velamurthy Adangam!

 

150 பேருக்காக எந்த மாட்டுக்காரனாவது காளையை அவிழ்த்துவிடுவானா? அந்த 150 பேர் யார்? அந்த 150 பேரை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? இது ஒரு தேவைஇல்லாத காரியமாக தெரிகிறது. நல்ல மிகச்சிறந்த அரசாங்கம் இருக்கின்ற நேரம் இது, முதல்வரும் சரி, அவருக்காக இருக்கக்கூடிய அத்தனை அதிகாரிகளும் சரி, அமைச்சர்களும் சரி எல்லாமே முற்போக்கான ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த காரியத்தில் முடிவெடுத்திருப்பது சரியாக தெரியவில்லை. கரோனாவை காரணம்காட்டி ஜல்லிக்கட்டை தாராளமாக நிறுத்தலாம். இப்படி நடைபெறும் ஜல்லிக்கட்டு ஒரு அபத்தமான காரியம். 150 பேர் என்றால் எந்த 150 பேர்? மாடு பிடிக்கவே 150 பேர் வருவார்கள். அறிவார்ந்த முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கின்ற அரசாங்கம் இவ்வாறு முடிவு பண்ணலாமா?

 

ஜல்லிக்கட்டு யாருக்கு நடத்துறீங்க, போலீஸுக்கா? மேடையில் இருக்கின்ற அதிகாரிக்கு நடத்துறீங்களா?  இது மக்கள் திருவிழா. இது தமிழகத்தினுடைய திருவிழா. தீபாவளி என்பது அகில இந்திய அளவில் எல்லாரும் கொண்டாடக்கூடிய பண்டிகை. தைப்பொங்கல் என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் உறவை கொண்டாடுகிற, கலாச்சாரத்தை கொண்டாடுகிற, பண்பாட்டை கொண்டாடுகிற திருவிழா. ஜே... ஜே... என்று இருக்கும். இப்படிப்பட்ட ஒரு குதூகலமான விழாவை 150 பேர் தான் பார்க்கலாம் என்றால் என்ன அர்த்தம். எனவே இது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.