Skip to main content

“ஐ.டி. கார்ட் கொண்டுவரலனா கீழ இறங்குங்க” - மாணவி, ஆசிரியை இடையே கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 "Why don't you bring your ID card and get down?" The argument between the student and the teacher ended in a scuffle

 

சென்னை அருகே தனியார் கல்லூரி பேருந்தில் ஆசிரியையும் மாணவியும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஓர் தனியார் கல்லூரி பேருந்தில் மாணவ மாணவிகளும் கல்லூரியின் ஆசிரியர்களும் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில் ஆசிரியர் ஒருவர் ஏறியதும் பேருந்தில் பயணித்த மாணவி ஆசிரியரின் அடையாள அட்டையை கேட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவியை தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் மாணவியும் பதிலுக்கு ஆசிரியையை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. 

 

இது தொடர்பான காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்