![ுரப](http://image.nakkheeran.in/cdn/farfuture/UwUw9GjkMRdA24UfVqymd0c1dHdvVA3XWzK6D7g549c/1643044147/sites/default/files/inline-images/online_1.jpg)
கரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் கல்லூரிகள் பல மாதங்கள் திறக்கப்படாமல் இருந்தன. வகுப்புகளும் தேர்வுகளும் இணையதளம் மூலம் நடந்தன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்துவருகின்றன. அதேபோல் தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கரோனா மூன்றாம் அலை இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு வரும் 31ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.