2022- ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான துறை சார்ந்த ஆணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? இடம் பெற்றிருக்கிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
1. பச்சரிசி- 1 கிலோ,
2. வெல்லம்- 1 கிலோ,
3. முந்திரி- 50 கிராம்,
4. திராட்சை- 50 கிராம்,
5. ஏலக்காய்- 10 கிராம்,
6. பாசிப்பருப்பு- 500 கிராம்,
7. நெய்- 100 கிராம்,
8. மஞ்சள் தூள்- 100 கிராம்,
9. மிளகாய் தூள்- 100 கிராம்,
10. மல்லித்தூள்- 100 கிராம்,
11. கடுகு- 100 கிராம்,
12. சீரகம்- 100 கிராம்,
13. மிளகு- 50 கிராம்,
14. புளி- 200 கிராம்,
15. கடலைப் பருப்பு- 250 கிராம்,
16. உளுத்தம் பருப்பு- 500 கிராம்,
17. ரவை- 1 கிலோ,
18. கோதுமை மாவு- 1 கிலோ,
19. உப்பு- 500 கிராம்,
20. துணிப்பை- 1
இந்த பொருட்களுடன் முழுக் கரும்பு ஒன்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.