நாகை மாவட்டம் தோப்புத்துறையில் முஹம்மதியா இல்ல திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது. மணமகன் D. தன்வீர் அகமதுவுக்கும், மணமகள் M. பாத்திமாவுக்கும் நடைபெற்ற திருமண நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மு. தமிமுன் அன்சாரி, உ.தனியரசு , நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர், ஆசிரியர். செல்வக்குமாருக்கு அவரது சேவையை பாராட்டி 'வானிலை பேரறிஞர்' என்ற விருது வழங்கப்பட்டது.கஜா புயல் வீசிய தருணத்தில் சரியான முறையில் புயலின் தாக்கத்தை கணித்து , மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் செல்வக்குமாரின் பெரிதும் பாராட்டப் பெற்றார்.
அதை மதிக்கும் வகையில், இப்பகுதியில் கல்வி, சுற்றுச்சூழல், நல்லிணக்கம் ஆகிய பணிகளில் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வரும் முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) சார்பில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருதை உ.தனியரசு முன்னாள் எம்எல்ஏ அளிக்க, ஆசிரியர் செல்வக்குமார் பெற்றுக் கொண்டார்.
பிரதிபலன் பாராமல் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு மக்களிடம் முன் எச்சரிக்கை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் அவருக்கு விருது வழங்கப்பட்டது பலராலும் பாராட்டப்படுகிறது.
இந்நிகழ்வில் கல்வி சேவகர் ஆரிபா, முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி துணை தாளாளர் முகம்மது யாஸின், மவ்லவி.JS.ரிபாயி, சமுதாய பிரமுகர் மெளலா.நாசர், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் தென்னரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் sk.வேதரத்தினம், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி, PVK பிரபு,ஜமாத் தலைவர் ஜபருல்லாகான், முன்னாள் ஜமாத் தலைவர் KM KI நவாஸ்தீன் , மவ்லவி .சாகுல் ஹமீது ஹஜ்ரத் , இலக்கிய பிரமுகர் புயல்.குமார் உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக மணமகளின் தந்தையும், முஹம்மதியா அறக்கட்டளையின் நிறுவனமான முகம்மது அலி அவர்கள் அனைவரையும் வரவேற்று விருந்தளித்து சிறப்பித்தார். தோப்புத்துறையின் சிறப்புகளை கூறும் பாடல் ஒன்றை பாடகர்.ஹாஜா பாடியதும். மாணவிகள் திருக்குர்ஆன் வசனங்களை ராகத்துடன் வாசித்ததும் அனைவராலும் ரசிக்கப்பட்டது.