Skip to main content

நமது கல்வி உரிமையை காப்போம்... இதை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும்... - நடிகர் சூர்யா வேண்டுகோள்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

We will protect our right to education ... We must make this known to those who deserve it ...- Actor Surya's request!

 

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் முறையிடுமாறு நடிகர் சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.

 

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இக்குழுவில், கடந்த 10ஆம் தேதி மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர்  உறுப்பினர்களாக  நியமனம் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நமது கல்வி உரிமையை காப்போம். அரசுப் பள்ளியில் படித்து பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். 

 

We will protect our right to education ... We must make this known to those who deserve it ...- Actor Surya's request!

 

ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தோருக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூகநீதிக்கு எதிரானது.

 

இந்தியா போன்ற பல மொழி கலாச்சார வேற்றுமை நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். கல்வி, மாநில உரிமை என்ற கொள்கையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி பயின்ற பிறகு நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர் கல்விக்குச் செல்ல வேண்டும் என்பது சமூகநீதிக்கு எதிரானது. நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய நீட் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து பயணிக்கும் அகரம் ஃபவுண்டேஷன் நீதிபதியிடம் நீட் பாதிப்புகளை பதிவுசெய்துவருகிறது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை. மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த மாணவர்கள் கனவில் நீட் மூலம் தீ வைக்கப்பட்டது. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் தவறாமல் முறையிட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார். 

 

நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என இதற்கு முன்பே நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை அறிக்கை மூலமாக நடிகர் சூர்யா தெரிவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.