திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், தீராம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாகவும், வார்டுகளில் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யப்படவில்லை என கடந்த மாதம் ஐந்து வார்டுகளின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதேபோல் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் மண்ணச்சநல்லுர் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளாின் மனைவி சோபானா காசோலைகளைப் பயன்படுத்தி பல ஊழல்கள் செய்துள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் அவா் மீது புகார்கள் கொடுக்கப்பட்டது.
இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. இதில் இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்களும் நிதியை முறைகேடாக பயன்படுத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்களின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து உத்தரவிட்டுள்ளார்.