Published on 12/06/2021 | Edited on 12/06/2021

வடசென்னையைச் சேர்ந்த பிரபல பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி விழுப்புரத்தில் பதுங்கிருந்த போது சுற்றி வளைத்து, அவரை தனிப்படையைச் சேர்ந்த காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, ரவுடி காக்காதோப்பு பாலாஜியை சென்னை அழைத்து வரும் தனிப்படையைச் சேர்ந்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.
ரவுடி காக்காதோப்பு பாலாஜி மீது காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட 30- க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.