/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/HKL_1.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான கட்டடத்தில் திரையிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது திரையிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பட புரோமோஷன் வேலைகள் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)