குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதை கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டன் தீவிரமடைந்தது. அன்றுமுதல் தொடந்து வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தின் 16 வது நாளான இன்று திராவிட இயக்க தலைவர் கி.வீரமணி, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் அமீர் ஆகியோர் போராட்டக்களத்துக்கு வந்து சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.