




Published on 25/10/2021 | Edited on 25/10/2021
இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறைகளில் ரயில்வே துறையும் ஒன்று. அதேபோல், இந்த துறையை நம்பி அதிகமான ஊழியர்களின் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் இன்று (25.10.2021) சென்னை பெரம்பூர், கேரேஜ் மெயின் கேட்டில் ரயில்வேதுறை ஊழியர்களுக்கு ஆதரவாக சு. வெங்கடேசன் எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே மருத்துவமனை PPP என கார்ப்பரேட்களிடம் கொடுத்தது, கண்ணில் படுவதையெல்லாம் விற்கும் மோடி அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.