Skip to main content

குப்பையை பிரித்து தந்ததால் தங்கம்... அசத்தும் வேலூர் இளைஞர்!

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

வேலூர் மாநகராட்சி 24 வது வார்டில் வசிக்கும் பொதுமக்களிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுயிருந்தார் வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநரான தினேஷ் சரவணன். அந்த அறிவிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக பிரித்து நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கவேண்டும். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து 30 நாட்களும் குப்பையை பிரித்து போடுபவர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். முப்பதாவது நாளில், ஒரு நாள் விடாமல் குப்பையை பிரித்து கொடுத்த அனைவரது பெயரையும் ஒரு துண்டு சீட்டில் எழுதி ஒரு குடுவையில் போடப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்களுக்கு தங்கமும், 4 நபர்களுக்கு வெள்ளியும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

அதன்படி கடந்த 45 நாட்களாக 24வது வார்டு மக்களை தொடர்ந்து கண்காணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நபர்களில், இரண்டு பேருக்கு தங்கமும், 4 பேருக்கு வெள்ளி வழங்கும் நிகழ்வு மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா, மண்டலம் 2 சுகாதார அலுவலர் சிவக்குமார் போன்றோர் வெற்றி பெற்ற பெண்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி வழங்கினார்கள்.

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் +2 மாணவிகள் 250 பேருக்கு தேர்வு எழுத எழுது பொருட்கள் இலவசமாக ஆசிரியர்கள் மூலமாக வழங்கியுள்ளார். வயதான, ஏழ்மையான தனிமையில் வாழும் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் உட்பட உதவிகள் வழங்குவது, வீடு கட்ட பொருள் உதவி, கிராமப்புற பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தருவது, தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பது என செயல்படுகிறார்.


இதுக்குறித்து 31 வயதான தினேஷ் சரவணனிடம் நாம் பேசியபோது, ''எனது அப்பா செல்வராஜ், பால் வியாபாரி. அம்மா தயிர் வியாபாரம் செய்து வந்தார். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. அதில் பெரிய அண்ணன் சரவணன், 8வது வரை மட்டும்மே படித்திருந்தார். குடும்ப தேவைக்காக அவரும் அப்பாவுடன் இணைந்து பால் வியாபாரம் செய்து மற்ற மூன்று பேரை படிக்க வைத்தார். அவர் பால் வியாபாரம் செய்ததோடு, எங்களை விட ஏழ்மையில் இருப்பவர்களுக்கும், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், படிக்கவைக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

2014ல் அவரது 35வது வயதில் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவரால் உதவி பெற்றவர்கள் பலர் வந்து அழுதபடி அவர் செய்த உதவிகளை நினைவு கூர்ந்தபோது கலங்கிவிட்டோம். அவர் இறப்புக்கு பின்பு அவரின் சமூக தொண்டு பாதியில் நின்றுவிட்டது. அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தான் பி.இ முடித்துவிட்டு சென்னையில் வேலைக்கு சேர்ந்தியிருந்தேன். அண்ணன் செய்து வந்த உதவிகள் திடீரென்று நிற்பதை மனம் ஏற்கவில்லை. அதை ஏன் நாம் செய்யக்கூடாது என நினைத்து நான் இந்த சேவையில் இறங்கினேன். என்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அதிலிருந்து தான் இந்த உதவிகளை செய்கிறேன். இதற்காக வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள் வேலூர் வந்துவிடுவேன். என்னால் முடிந்தளவு தேவை இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். இதையெல்லாம் நான் முகநூல், ட்விட்டர் போன்றவற்றில் பதிவிட்டு வந்தேன். அதனைப்பார்த்து தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி ட்விட்டரில் என்னை பாராட்டினார்.

 

சமூக வளைத்தளம் வழியாக நான் செய்யும் உதவிகளை பார்த்தவர்கள் சிலர், எங்களால் களத்தில் இறங்கி உதவ முடியாது, நீங்கள் எங்கள் சார்பாக உதவ முடியுமா எனக்கேட்டு தொடர்பு கொண்டார்கள். நான் உதவி செய்ய எந்த அமைப்பையும் வைத்திருக்கவில்லை, தனிப்பட்ட முறையில், சொந்தப்பணத்தில் இருந்துதான் உதவி செய்கிறேன். மற்றவர்களிடம் பணம் வாங்கி உதவினால் சரியாக இருக்குமா என யோசித்தேன். சிலரின் அன்பால் அவர்கள் தந்த நிதியை வாங்கி அவர்கள் சொல்வது போல் உதவுகிறேன். அதுக்குறித்த கணக்கை பிளாக் வழியாக வெளிப்படையாக தெரிவித்துவிடுகிறேன்'' என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்