Skip to main content

வேலூர் தேர்தல் நிறுத்தம்.. பின்னணி தகவல்கள் 

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

 

வேலூரில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை தேர்தல் ஆணையம் தடை செய்யப்போகிறது என  10 நாட்களுக்கு முன்பே நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. வேலூரில் நக்கீரன் சொன்னபடியே தேர்தலுக்கு தடை விதித்து நேற்று இரவு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதுப்பற்றி தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பில், அந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த ரிப்போர்ட், கலக்டெர் அளித்த ரிப்போர்ட், சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த  ரிப்போர்ட், போலீஸ் வழக்கு பதிவு செய்த விவரங்கள் ஆகியவை அடங்கி இருந்தன. 

 

v

 

இந்த ரிப்போர்ட்டுகள் அனைத்தும் 10 நாட்களுக்கு முன்பே தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துவிட்டது. அதன் அடிப்படையில் வேலூர்  தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் இதேபோன்ற பிரச்சனைவர அங்கே  தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அப்பொழுது திரிபுராவுக்கு ஒரு நீதி வேலூருக்கு ஒரு நீதியா என தேர்தல் கமிஷனில் கேள்வி எழுந்தது. அதனால் முதல் கட்டமாக வேலூரில் தேர்தல் நடத்துவதற்கு தடை என்கிற உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்தது என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிகின்றன. 

 

வேலூர் பாணியிலேயே தொடர்ந்து தேனி பாராளுமன்ற தேர்தலையும் தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு ஆலோசனைகள் வந்துள்ளது. அதை பரிசீலிப்பதாக தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிகின்றன.


 

சார்ந்த செய்திகள்