சென்னை கோயம்பேடு, வேளச்சேரியில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி அன்று திறக்கவிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் நாள்தோறும் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. அந்த வகையில், வேளச்சேரி மேம்பாலத்திற்கு 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக, மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்விரு பாலங்களின் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்றுவருவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், இவ்விரு மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரு மேம்பாலங்களையும் நவம்பர் 1ஆம் தேதி அன்று திறந்து வைக்க உள்ளதாக அரசு கூறியுள்ளது.