Skip to main content

''வைகைப்புயல் வைகைப்புயல்'னு சொல்றாங்க ஆனா...''- விஜய் பாணியில் குட்டிக்கதை சொன்ன வடிவேலு!

Published on 10/09/2021 | Edited on 11/09/2021

 

Vadivelu told a short story in the style of Vijay

 

இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையை அடுத்து நடிகர் வடிவேலு நடிக்க ரெட் கார்டு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், ''வைகைப்புயல் வைகைப்புயல்'னு சொல்கிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் ஒரு பெரிய சூறாவளியே அடிச்சுருச்சி. அடிக்கடி கதை ஒன்றை சொல்வேன். ஒரு பத்திரிகையில் கூட சொல்லி இருக்கிறேன். ஒரு நோயாளி ஒரு டாக்டரிடம் சென்று, ஐயா மனசே சரியில்லை... நிம்மதி இல்லை... தூக்கமே வரவில்லை... எனக்கு ஏதாவது ஒரு மருத்துவம் பண்ணுங்க என கேட்டுள்ளார். அதற்கு அந்த டாக்டர் சொல்லிருக்காரு, இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்க திங்கட்கிழமை வாங்க நான் உங்களுக்கு ஒரு ட்ரீட்மென்ட் எடுக்கிறேன் என சொல்லிருக்கார். அதற்கு நோயாளி, எனக்கு உண்மையிலேயே தூக்கமே வர மாட்டேங்குது. நிம்மதி இல்லை என்னை நீங்கதான் காப்பாத்தணும் ஏதாவது ஒரு  ட்ரீட்மென்ட் இப்பவே எடுங்க என்றார். 

 

நீங்க திங்கட்கிழமை வாங்கனு திரும்பவும் அந்த டாக்டர் சொல்ல, இல்ல சார் என்னால முடியாது. கண்டிப்பா நீங்க எனக்கு இன்னைக்கு தான் ட்ரீட்மென்ட் எடுக்கனும்'னு அந்த நோயாளி சொல்லிருக்காரு. அப்போ அதுக்கு அந்த டாக்டர் சொல்லிருக்காரு, நீங்க ஒன்னு செய்யுங்க, பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அங்க ஒரு பபூன் பிரமாதமா காமெடி பண்றாரு. அங்க போறதுக்காக நானும் என் மனைவியும் ரெண்டு டிக்கெட் எடுத்து வைச்சுருக்கோம். என் மனைவி டிக்கெட்டை உங்களுக்கு தருகிறேன். நீங்களும் நானும் போய் அந்த சர்க்கஸை பார்ப்போம். அதில் அந்த பபூன் செய்ற காமெடியை பாத்துட்டீங்கனா உங்க மனசுல இருக்குற பாரமெல்லாமல் இறங்கிடும். அதுக்கப்புறம் நல்லா இருக்கு என கூறியிருக்கிறார். அதற்கு நோயாளி சொல்லியிருக்கிறார், அந்த பபூனே நான்தான்னு. கிட்டத்தட்ட அந்த அளவுக்குத்தான் நான் வாழ்ந்தேன். எனக்கு மட்டுமல்ல இதற்கிடையில் கடந்த நாலு வருஷமா நடிக்காம இருந்தது மட்டுமில்லாம உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் கரோனா என்னும் கொடுமையான நோய் வந்து, தம்பிய அண்ணன் பாக்க முடியல, தாய மகன் பாக்க முடியல, மனைவியை கணவன் பாக்க முடியல. வெளிநாட்டில் இருந்தால் தான் விசா கிடைக்காது. ஆனா இப்போ அடுத்த தெருவுல, அடுத்த வீட்டில் ஒருவர் இறந்தால் கூட, ஏன் கணவனை இழந்தால் கூட மனைவி மாடியில் இருக்கணும். சீக்கிரம் எடுத்துட்டு போங்க என் பிள்ளைகளுக்கு வந்திட போகுது அப்படினு பயந்து நடுங்கும் காலம். இதனால் இந்த பிரச்சனையில் என்னுடைய பிரச்சனை சாதாரண பிரச்சினை ஆகிவிட்டது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார்.