தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மருத்துவப் பணியாளர்கள் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை செய்து வந்தனர்.
அப்போது அந்தப் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அருவருக்கு தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். வகுப்பறையிலிருந்து ஆசிரியர்கள் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக மாணவியை மீட்டு நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
சில மணி நேரம் அங்கேயே மாணவியை தங்க வைத்திருந்தனர். தொடர்ந்து மேலும் அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனித்து வந்தனர். அந்த மாணவி சில மணி நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பியதும் மருத்துவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர். தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அந்த மாணவியை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.