Skip to main content

 உஷா மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன்

Published on 12/04/2018 | Edited on 12/04/2018

 

kamaraj

 

திருச்சி திருவெறும்பூரில் இளம்பெண் உஷா மரணடைய காரணமாக இருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

திருவெறும்பூர் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ், தம்பதிகள் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று எட்டி உதைத்தார். இதில், கணவருடன் வண்டியின் பின்பக்கம் அமர்ந்திருந்த உஷா என்ற பெண் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், சுமார் 3000 பேர் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பிலிருந்து வந்த கண்டனங்கள் குவிந்ததால், உஷா மரணத்திற்கு காரணமாக இருந்த காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் 3 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அதனை நீதிமன்றம் 3 முறையும் தள்ளுபடி செய்துவிட்டது. 

 

பின்னர் காமராஜ் மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், காமராஜுக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

15 பேருக்கு மரண தண்டனை; தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி போலீசில் புகார்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
The woman judge who gave the verdict was threatened  for 15 people sentenced to lost their lives

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது தாயார், மனைவி மற்றும் மகள் ஆகியோர் கண்முன்னே ரஞ்சித் ஸ்ரீனிவாசன் தூக்கிட்டு கொலை செய்யப்பட்டார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் தூக்கிட்டு கொலை செய்யப்பட்டார். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து இந்தக் கொலை வழக்கு கேரள மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நவாஸ், ஷெமிர், நசீர் உள்ளிட்ட 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரளாவில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி ஸ்ரீதேவிக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து நீதிபதி ஸ்ரீதேவி, ஆலப்புழா மாவட்ட எஸ்.பி.க்கு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், நீதிபதி ஸ்ரீதேவிக்கு துப்பாக்கி ஏந்திய  போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.