வேலூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான டீம், வேலூர் மாநகரம் தோட்டப்பாளையத்தில் உள்ள சுண்ணாம்புக்கார வீதியில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். இதில் பிளாஸ்டிக் கப்கள், கேரி பேகுகள் என பலவற்றை விற்பனை செய்யும் கடைகள் என 15 கடைகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து இதுபோன்ற திடீர் சோதனைகள் கடைகளில் நடத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள். இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.