Published on 13/09/2021 | Edited on 13/09/2021
![Anna University. Udayanithi appointed as a member of the governing council](http://image.nakkheeran.in/cdn/farfuture/GI0RE8XekKylzjCPudXtNsjB2m3MGj9Xj44joOJczgE/1631523520/sites/default/files/inline-images/UDHAYA%20%281%29.jpg)
புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அலுவல் சாரா உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.