
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (26/06/2022) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர், ஆலங்குடியில் ஒரு நிகழ்ச்சி முடித்து கொண்டு புதுக்கோட்டை செல்லும் வழியில் ஆலங்குடி தொகுதி எல்லையில் கேப்பரை முக்கத்தில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 99- வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் அமைச்சர் மெய்யநாதன், ஏற்பாட்டில் 99 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடி ஏற்றினார். மேலும், சிலம்பாட்ட வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது. அப்போது வருங்கால முதல்வர் என்றும், நாளைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்றும் கட்சித் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து, சில குழந்தைகளுக்கும் பெயர் சூட்டினார் உதயநிதி.