தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மஸாஜ் மற்றும் ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடப்பதாக அவ்வப்போது காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைக்கின்றன. அதனடிப்படையில் காவல்துறை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கையும் எடுத்துவருகிறது.
அந்தவகையில், தற்போதுதிருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியதகவல் கிடைத்தது.அத்தகவலின் அடிப்படையில் அதிரடியாக சோதனை செய்தபோது, அந்த லாட்ஜில் இரண்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்ட காவல்துறையினர், மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தனர்.
மேலும், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மணிகண்டன், மதி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்விருவரை தாண்டி முருகன், பிரசன்னா ஆகிய இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.