Published on 11/09/2022 | Edited on 11/09/2022

விருதுநகர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கோட்பாடுகள் அடங்கிய நூல் வெளியிடப்படவுள்ளது. தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் திராவிட மாடல் நூலை வெளியிடுகிறார்.
தி.மு.க.வின் பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு முதல் நூலை பெற்றுக் கொள்கிறார். திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகள் அடங்கிய நூல் வெளியிடுவதை காலத்தின் தேவையாக கருதப்படுவதாக தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.