ஜெயங்கொண்டம் நகரத்தில் செந்துறை சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிமாநிலத்தில் இருந்து சர்க்கஸ் (SAM) நடத்துவதற்காக வந்தவர்கள், கரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு சர்க்கஸ் நடத்தமுடியாமல் உணவின்றி சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அரிசி, கோதுமை, காய்கறிகள், மளிகை சாமான்கள் ஆகிய பொருட்களை ஜெயங்கொண்டம் கண்ணன் ஜவுளி ஸ்டோர் உதவியுடன் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் 25/05/2021 அன்று மேற்கண்ட பொருட்களை வழங்கினார்கள்.
சர்க்கஸ் நடத்தாமல் இருந்ததால், அன்றாட வாழ்க்கையைப் போல் தங்களால் கடந்து செல்ல முடியவில்லை என்றும், தங்களுக்கு இந்த உணவுப்பொருட்களை வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவருக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின்போது காவல் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.