திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.30 மணி அளவில் மிகக் கோலாகலமாகத் துவங்கியது. இப்போட்டியினை ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன் துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, விராலிமலை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 750 ஜல்லிக்கட்டு காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இப்போட்டியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்போட்டியில் அவசர உதவிக்காக 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளது. தற்போது வரை 210 காளைகள் களம் கண்டுள்ளன. இரண்டாவது சுற்றில் 100 ஜல்லிக்கட்டு வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். இதுவரை 7 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வருகிறார்.