Skip to main content

திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Trichy government doctors record!

 

கரூர் மாவட்டம், வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த்(38). இவருக்கு கடந்த ஒரு வருட காலமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. இந்தத் தலைவலி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் தலைவலி குறையாத காரணத்தால் கடந்த மாதம் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலைப் பகுதியான மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காது மூக்கு தொண்டை மருத்துவ குழுவினர்களான மருத்துவர் சதீஷ்குமார், மருத்துவர் அண்ணாமலை, மருத்துவர் கோகுல் ஆனந்த் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துராமன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் நோயாளி ரஜினிகாந்தின் மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளை பகுதியிலிருந்த கட்டியை முழுவதுமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் தற்போது ரஜினிகாந்த் பூரண குணமடைந்த நிலையில்,  அரசு தலைமை மருத்துவமனை டீன் நேருவுக்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடு திரும்பி உள்ளார்.

 

சார்ந்த செய்திகள்