Published on 10/08/2022 | Edited on 10/08/2022
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 75 வது ஆண்டு சுதந்திர தின விழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, வருகிற 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றுவதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவின் வாயிலாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசியக்கொடி தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் அனைவரது வீடுகளிலும் பறக்க வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று தேசிய கொடிகளை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.