trichy coronavirus family incident peoples

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர வள்ளி. இவருக்கு வயது 72. இவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.. இதனிடையே, அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும்கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியான நிலையில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

இதனால் தாயின் உடல் அடக்கம் செய்ய இயலாத சூழலில், அவர்கள் திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகளைத் தொடர்புக் கொண்டனர். அதன் பேரில் திருச்சி மாவட்ட துணைச் செயலாளர்கள் தல்ஹா பாபு மற்றும் டி.கே.சிராஜ்தீன் தலைமையில் திருவெறும்பூர் பகுதி த.மு.மு.க நிர்வாகிகள், திருவெறும்பூர் பகுதியில் உள்ள மயானத்தில் இந்து மத வழக்கப்படி அந்த உடலை தகனம் செய்தனர்.

Advertisment

த.மு.மு.க.வின் நிர்வாகிகளின் இந்த மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.