
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமைக் காவலர் ராஜ்குமார் என்பவர் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தார். இவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 27ம் தேதி இறந்தார். மேலும், கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையிலிருந்த கடலூர் முதுநகர் காவல் நிலையம் தலைமைக் காவலர் அரங்கநாயகம் என்பவரும் சிகிச்சை பலனின்றி இந்த மாதம் 13ம் ஆம் தேதி இறந்தார். கரோனாவில் இறந்துபோன இரண்டு தலைமைக் காவலர்களுக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ம.ஸ்ரீ அபிநவ், இ.கா.ப., அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் பூங்கோதை, ஆயுதப்படை ஆய்வாளர் முத்துகுமரன் மற்றும் காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், உயிரிழந்த காவலர்களின் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.