Published on 25/06/2022 | Edited on 25/06/2022
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சோம சமுத்திரம் கிராமத்தில் மிகவும் பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இடிபாடுகளுடன் உள்ளதால் கோவிலிலிருந்த சிலைகளை எடுத்து கோயிலுக்கு வெளியே வைத்து அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். இக்கோவிலில் கருவறை இருந்த இடத்தில் அதன் கற்களை அகற்றி விட்டு சுமார் மூன்று அடி ஆழத்திற்கு மர்ம நபர்கள் பள்ளம் தோண்டியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அந்தக் கோவிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இக்கோயில் மிகவும் பழமையான கோயில் என்பதால் மூல விக்கிரகத்தின் கீழே புதையல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் மர்மநபர்கள் பள்ளம் தோண்டியிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.