24 hrs transports operating tn govt announced

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இன்றும்நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் மாநகரப் பேருந்துகள் நாளை (09/05/2021) இரவு 09.00 மணி வரை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்றும்நாளையும் மாலை 06.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதுகிறது. நாளை மறுநாள் முதல் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் விற்பனை நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.