Published on 26/04/2022 | Edited on 26/04/2022
கொடநாடு வழக்கை விசாரித்துவந்த உதகை நீதிபதி சஞ்சை பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 58 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் கொடநாடு வழக்கை விசாரித்துவந்த உதகை நீதிபதி சஞ்சை பாபாவும் அடக்கம். இவர், தற்போது தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றமானது தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.