tnpds smart ration card peoples minister announced

சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்க்கரை குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலை இணைத்து இன்று முதல் டிசம்பர் 20- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.tnpds.gov.in என்ற இணையத்தளத்திலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்டதும் உடனடியாக பரிசீலித்து சர்க்கரை குடும்ப அட்டைகள், அரிசி அட்டைகளாக மாற்றப்படும். அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன.'இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisment