Skip to main content

8 ஆண்டுகள் பட்டாவுக்காக அலைந்தவர் தாலுகா அலுவலகத்தை தீ வைத்து எரிக்க முயன்றதால்.. நிரந்தரமா கேட்டை பூட்டிய அதிகாரிகள்..

Published on 07/09/2018 | Edited on 07/09/2018

 

ar


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்எதவர் அன்புராஜ். சென்யில் ஒரு கேஸ் ஏஜன்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது தந்தையின் சொத்தை தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி கடந்த 2018 ம் ஆண்டு முதல் பல முறை மனு கொடுத்தும் பயனில்லை.

 

 மாதம் ஒரு முறை சென்னையிலிருந்து செலவு செய்து கொண்டு அறந்தாங்கி வந்து சென்று செலவு செய்தவரை அவரது குடும்பத்தினர் பட்டா வாங்கிக் கொண்டு வா என்று சொன்னதால் விரக்தியடைந்தார். எத்தனை ஆண்டுகள் ஒரு பட்டாவுக்காக அலைவது என்று ஒரு முடிவுக்கு வந்தவர். கடந்த 31 ந் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர், வெல்டிங் குழாயுடன் அறந்தாங்கி தாலுகா அலுவகத்திற்கு சென்று கணினி மற்றும் ஆவண அறையின் ஜன்னல் ஓரமாக தீ பற்ற வைத்தார். அந்த தீ பரவுமும் முன்பு அவரை சிலர் பிடித்துக் கொண்டதால் ஆவணங்கள் தீயிலிருந்து தப்பியது. அதன் பிறகு வந்த போலிசார் அன்புராஜை கைது செய்து அலுவலகத்திற்கு தீ வைக்க முயன்றதாக சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் அதன் பிறகும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. கண்ணீர்  ஏழையான நான் நேர்மையாக பட்டா மாறுதல் கேட்டேன் கிடைக்கவில்லை. என் குடும்பத்தினரும் பட்டா வாங்கலன்னா தாலுகா அலுவலகத்திலேயே தூக்கு போட்டுக்கன்னு திட்டுறாங்க. ஒரு மாதம் வேலை செய்ற பணத்தில் அறந்தாங்கி வந்து போனேன். இன்னும் எத்தனை வருசம் தான் அலையுறது என்று கண்ணீரை கொட்டிக் கொண்டே காவல் நிலையம் சென்றார்.

 

    அதன் பிறகும் அங்கு மனுவோடு வருவோரிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. ஆனால் அடுத்த சில நாட்களில் அன்புராஜ் போல வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தாலுகா அலுவலகத்திற்குள் செல்லும் பிரதான நுழைவாயிலை பூட்டிவிட்டார்கள். அந்த வளாகத்தில் தான் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், நலிவுற்றோர் நலத்திட்ட அலுவலகம் உள்ளது. நுழைவாயில் பூட்டப்பட்டு சிறிய கதவு மட்டும் திறக்கப்பட்டிருப்பதால் அந்த அலுவலகத்திற்கு வரும் பலரும் அலுவலகம் திறக்கவில்லை என்று செல்வதும் நடக்கிறது. மேலும் அந்த அலுவலகங்களுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த தாராளமாக இடமிருந்தும் நுழைவாயில் பூட்டப்பட்டதால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. 

 

    அதிகாரிகள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு துரித நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பு சமூக ஆர்வலர்கள் மேலும் சில கேள்விகளை அறந்தாங்கி வட்டாட்சியருக்கு சமூக வலைதளங்கள் மூலம் எழுப்பியுள்ளனர்.

 

    நீங்கள் பூட்டு போட்டு பூட்ட வேண்யது நுழைவாயிலை அல்ல.. அலுவலகத்தில் வாங்கும் லஞ்சலாவண்யங்களை, அலுவலகத்தை தீ வைக்கும் அளவுக்கு ஏழை தொழிலாளியை அலையவிட்டவர்களை, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு பொதுமக்களை விரட்டியடிக்கும் கேடுகெட்ட நிலையை.. தமிழகத்திலேயே இல்லாத அளவு அறந்தாங்கியில் நடக்கும் மணல் கொள்ளையை, அறக்கு துணை போகு அதிகாரிகளை.. வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் அப்படியே இருந்தாலும் ஏழைகளை விரட்டியடிக்கும் அலட்சியவாதிகளை.. இவற்றை தான் முதலில் பூட்டை போட்டு பூட்ட வேண்டும் பிரதான நுழைவாயிலை பூட்டி பயனில்லை என்று அந்த பதிவுகள் பரவுகிறது. 


            

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

ஒரே ஒன்றியத்தில் 45 மாணவர்கள் தேர்ச்சி! மாநிலத்தில் முதலிடம்;  பாராட்டி பரிசு வழங்கிய அமைச்சர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
45 students passed in one union In the National Aptitude Test in aranthangi

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்புகளில் இருந்தே போட்டித் தேர்வுத் திறனை வளர்க்கும் விதமாக தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம், +2 முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல 9, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டில் நடந்த தேசிய திறனாய்வுத் தேர்வில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் 179 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 78 பேர் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக, அறந்தாங்கி ஒன்றியத்தில் மட்டும் 17 பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மேலும், பெரியாளூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து மட்டும் 10 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதே போலம், குன்னக்குரும்பி அரசுப் பள்ளியில் படிக்கும் 8 மாணவ, மாணவிகள் தேர்வாகி உள்ளனர். ஆவணத்தான்கோட்டை கிழக்கு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

போட்டித் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாக கல்வித்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். மேலும் அவர், சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கி பொன்னாடை அணிவித்தார்.  

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, “மாணவர்களை இளம் வயதிலேயே போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கும் இந்த தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும், ஊக்கப்படுத்திய கல்வித்துறை அதிகாரிகளையும், பாராட்டுவதோடு சாதித்துக் காட்டிய மாணவ, மாணவிகளையும் மனதார பாராட்டுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமையில், நான் பெரியாளூர் மேற்கு வழியாக சென்ற போது, அந்த ஊரில் இருந்த பள்ளியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆசிரியை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இறங்கிச் சென்று போய் அவரிடம், ‘என்ன பாடம் எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அந்த ஆசிரியை, தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி கொடுப்பதாக சொன்னார். இன்று அந்தப் பள்ளியில் இருந்து மகா சாதனை படைத்து ஒரே பள்ளியில் 10 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. விடுமுறையிலும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பயின்ற மாணவர்களுக்கும் பாராட்டுகள்.

கல்வி ஒன்றே அழிக்க முடியாத செல்வம். இன்று பாராட்டுப் பெற வந்த ஒரு மாணவன் எங்கள் பள்ளியில், மாணவிகளுக்கு கழிவறை உள்ளது, மாணவர்களுக்கு இ்ல்லை கட்டிக் கொடுங்கள் என்று கேட்டார். அந்த மாணவரை பாராட்டுகிறேன். இதற்கான துணிச்சலை கொடுத்தது கல்விதான். மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம். 

சிறந்த தலைமை ஆசிரியர் பச்சலூர் ஜோதிமணியின் முயற்சியால், நிறைய பள்ளிகள் மாறிக் கொண்டிருக்கிறது என்பது பெருமையாக உள்ளது. அதே போல அறந்தாங்கி ஒன்றியத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 122 மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்து சாதனை படைத்துள்ளனர். இது போன்ற சாதனைகளை ஒவ்வொரு பள்ளியிலும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார். இந்த விழாவில் அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.