Skip to main content

"டெங்குவால் இந்தாண்டு மூன்று பேர் உயிரிழப்பு"- ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி!

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

"Three people have died due to dengue this year" - J. Radhakrishnan interview!

 

சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு செய்தப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "போலியோவை போல் கரோனா ஒழிக்கப்பட்ட நோயல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசிப் போட வேண்டும். கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குவால் இந்தாண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 20 லட்சம் பேர் இரண்டாவது கரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதது சவாலாக இருக்கிறது" எனத் தெரிவித்தார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை தீவுத்திடலில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Corporation Commissioner inspection in Chennai Island!

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதே சமயம் கோயம்பேட்டில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜயகாந்தின் உடல் இடமாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினர் முடிவு செய்வர் எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாகச் சென்னை தீவுத் திடலில் அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

நாளை (29.12.2023) அதிகாலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் மாற்றப்படும் என தேமுதிக சார்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை (29.12.2023) அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள சென்னை தீவுத் திடலில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீவுத்திடலில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். 

Next Story

டெங்கு காய்ச்சல்; சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Dengue fever Commissioner warns Chennai Corporation officials

 

டெங்கு காய்ச்சலால் 4 வயது குழந்தை உயிரிழந்ததையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் அப்பகுயில் ஆய்வு செய்தார்.

 

சென்னையை அடுத்த மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தார். சென்னை மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அப்பகுதியில் டெங்கு ஒழிப்பு குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் பேரல்கள், கால்வாய்களை முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

 

மேலும் டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக தமிழகத் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உயர் அலுவலர்களுடன் நாளை (12.09.2023) ஆலோசனை நடத்த உள்ளார். இது மட்டுமின்றி செப்டம்பர் 16ஆம் தேதி மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்கள், மருத்துவத்துறை இணை இயக்குநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.