போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதிய வகை போதைப் பொருட்கள் மாணவர்களுக்கு விற்பதாக தகவல் கடந்த இருவாரங்களுக்கு முன் கிடைத்தது.
அப்போது எல்.எஸ்.டி மற்றும் போதை மாத்திரை உட்பட புதிய வகை போதை பொருட்களை விற்பனை செய்த பலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த கும்பலைச் சேர்ந்த கேரளா நபர்கள் கல்லூரி மாணவர்கள் போர்வையில் மயிலேறிபாளையம் பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து இன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மயிலேரிபாளையம் பகுதியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த பில்ஜூலால், அர்ஜூன்பிரசாத் , சாரங் ஆகிய மூன்று பேரிடம் இருந்து போதை மருத்து தடவிய LSD அட்டை, methamphetamine போதை மருந்து, 1.25 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களைப். பற்றி சொல்லும் நுண்ணறிவு போலீசார்...கேரளாவைச் சேர்ந்த இந்த நபர்கள் இங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி துறையில் இருக்கும் ஊழியர்களை குறிவைத்து அவ்வப்போது பெரிய அளவில் பார்ட்டி நடத்தி இந்த புதிய வகை போதை பொருட்களை விநியோகம் செய்திருக்கிறார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட இன்னும் சிலரை நாங்கள் தேடி வருகிறோம். அவர்களும் சிக்கினால் ஒரு பெரிய போதை நெட்வொர்க் பிடிபடலாம் என்கிறார்கள் உறுதியாய்.