Skip to main content

மகனைக்கொன்ற கள்ளக்காதலனை படுகொலை செய்த மஞ்சுளா – சபதத்தை முடித்தபின் சரண்டர்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018

 

c


திருவண்ணாமலை நகரம், அய்யங்குளத்தெருவில் இந்தியன் வங்கி எதிரே கிப்ட் ஷாப் மற்றும் மொபைல் ரீசார்ச் கடை உள்ளது. இந்த கடையில்  டிசம்பர் 29ந்தேதி மாலை 5.30 மணியளவில் கடைக்குள் இருந்தவரை இரண்டு பேர் கடைக்குள் புகுந்து அடித்துள்ளனர். அந்த இளைஞர் வெளியே ஓடிவர, வெளியே நின்றிருந்த இரண்டு பேர் மடக்கி சரமாரியாக கழுத்திலேயே வெட்டி கொன்றுவிட்டு இரண்டு இருசக்கர வாகனத்தில் 5 பேர் எஸ்கேப்பாகினர்.

 

m


கொலை செய்யப்பட்ட நாகராஜ், சென்னையில் பணியாற்றும்போது, சென்னை எம்.ஜீ.ஆர் நகரில் குடியிருந்துள்ளார். அங்கு வசித்தபோது கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவை ஆசை வார்த்தை கூறி கள்ளக்காதலியாக வைத்திருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியான கார்த்திகேயன் மனைவியை எச்சரித்துள்ளார். அதோடு காவல்நிலையத்தில் புகார் தந்தனர். முதல் முறை எச்சரித்து அனுப்பப்பட்ட நாகராஜ், சில மாதங்கள் அமைதியாக இருந்தவர் மீண்டும் மஞ்சுளாவிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இதை அறிந்த கார்த்திகேயன், மீண்டும் காவல்நிலையத்தில் புகார் தந்ததன் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


15 நாள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவனை குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே துரத்தினர். இதனால் கோபமான நாகராஜ், கார்த்திகேயன் – மஞ்சுளா தம்பதியரின் மகன் சாய்’யை கடந்த பிப்ரவரி 28ந்தேதி கடத்தி கொடூரமா கொலை செய்தான். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டான். உன் நடத்தையால் தான் குழந்தையை பறிக்கொடுத்தேன் என மஞ்சுளாவை, அவரது கணவர் கார்த்திகேயன் பிரிந்தார். இதனால் மஞ்சுளா அதிர்ச்சியாகிப்போனார்.


தன்  மகன் கொலை செய்யப்பட்டதும், தன் வாழ்க்கை பாழாகிப்போனதுக்கும்  நாகராஜ் தான் காரணம் என அவனை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக துப்பாக்கி வாங்க முயற்சி செய்துள்ளார். இதற்காக 2 லட்ச ரூபாய் பணம் தந்துள்ளார். ஆனால், அவர்கள் தந்தது பொம்மை துப்பாக்கி. இந்த பிரச்சனை தெரிந்து சைதாப்பேட்டை போலிஸ் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.


சிறையில் இருந்து இரண்டு மாதத்துக்கு முன்பு தான் வெளியில் வந்துள்ளார் மஞ்சுளா. வந்ததுமே கூலிப்படை ஒன்றை தேடியுள்ளார். அப்போது அரும்பாக்ககத்தை சேர்ந்த ஷ்யாம்சுந்தர் மூலமாக நாகராஜ்ஜை கொலை செய்ய ரேட் பேசியுள்ளார். 5 லட்ச ரூபாய்க்கு அந்த டீல் ஓ.கேவாகி சந்தோஷ், சரவணன், சென்னை சூளைமேடு தினேஷ் உட்பட 5 பேர் திருவண்ணாமலை சென்று நாகராஜை கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர்.

 

m


கொலை செய்தவர்களை திருவண்ணாமலை போலிஸ் தேடி வந்தநிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மஞ்சுளா உட்பட 5 பேர் சரண்டராகியுள்ளனர். கொலை நடந்த இடத்தில் இருந்த இன்னும் ஒருவர் சரணடையவில்லை எனக்கூறப்படுகிறது. 2019 ஜனவரி 4ந்தேதி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இவர்களை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.


மஞ்சுளா, ஏற்கனவே திருமணமானவர். கணவர் இரண்டு வருடத்தில் இறந்துவிட்டார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த மஞ்சுளாவை பார்த்தபின் காதலாகி கார்த்திகேயன் தன் விருப்பத்தை மஞ்சுளாவிடம் கூறி குடும்பத்தாரை எதிர்த்து மஞ்சுளாவை மணந்துக்கொண்டுள்ளார்.   அன்பாக சென்றுக்கொண்டிருந்த குடும்பத்தில் நாகராஜ் என்கிற நாகம் புகுந்து சந்தோஷத்தை சிதைத்தது. 

மகன் கொலை செய்யப்பட, தன் சபதத்தை முடிக்க கள்ளக்காதனை கொலை செய்த மஞ்சுளா சிறைக்கு போக, அடுத்தடுத்த அதிர்வுகளில் இருந்து மீளமுடியாமல் உள்ளார் கார்த்திகேயன்.

 

சார்ந்த செய்திகள்