திருச்சி கண்டோன்மெண்ட் பென்வெல்ஸ் ரோடு முடுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் என்பவரின் மனைவி ராஜபிரியா(31). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மனைவி ராகப்பிரியா. இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 15 நபர்கள் ராஜபிரியாவின் வீட்டு முன்பு வந்து ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது வீடு புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை சூறையாடி, ராஜபிரியா மற்றும் அவரது கணவரின் தாயிடம் இருந்து நகையை பறித்துச் சென்றனர்.
இது குறித்து ராஜபிரியா கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆறுமுகம் அவரது மனைவி மற்றும் சுப்பிரமணியன், ராம்குமார், விவேக், பாலாஜி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுப்பிரமணியன், ராம்குமார், விவேக், பாலாஜி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீசார் தேடி வருகின்றனர்.