Published on 13/02/2020 | Edited on 13/02/2020
எங்கு திருட்டு நடந்தாலும் முதலில் புகாரளிக்கப்படுவது காவல்நிலையத்தில் தான். இப்படி இருக்க, காவல் நிலையத்திலேயே ஒரு பொருள் காணாமல் போயுள்ளதாக புகாரளிக்கப்பட்ட சம்பவம் சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் வைத்திருந்த இருந்து தனது பெட்டியை காணவில்லை என தலைமை காவலர் முத்துசாமி புகாரளித்துள்ளார். அந்த பெட்டியில் உபகரணங்கள், துணிகள் வைத்திருந்ததாகவும், இப்படி தன் உடைமைகளை வைத்திருந்த அந்த இரும்பு பெட்டியை காணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருட்டு வழக்குகளை விசாரித்து களவு போன பொருட்களை மீட்டுத் தரும் காவல்நிலையத்திலேயே அதுவும் தலைமை காவலரின் பெட்டி காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.