ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் ராமசந்திரன்(55). இவர் மீனவர் பிடி தொழில் செய்த்தோடு, கோவில் நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில், நேற்று உச்சிபுளி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி சென்ற போது முன் விரோதம் காரணமாக கார்த்தி மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரும் கம்பியால் தாக்கியதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
கோவிலை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட மோதலில் கொலை நிகழ்ந்தாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உச்சிபுளி போலிஸார் வழக்கு பதிவு செய்து கார்த்தி, முனீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பின் ராமச்சந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 2017 முதல் தொடர்ந்து இந்த பிரச்சனை நிலவி வருகிறது. அடுத்து கொலை சம்பவம் நிகழாமல் தடுக்க கொலையாளிகளை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும், உயிரிழந்த ராமசந்திரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உச்சப்புளி அருகே நாகாச்சி என்ற இடத்தில் மதுரை-தனுஸ்கோடி தேசியநெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இராமேஸ்வரம் துனை கண்காணிப்பாளர் மகேஷ் கோட்டாட்சியர் சுமன் ஆகியோர் உறவினர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்வதாக உத்திரவாதம் அளித்ததையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது..
இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.