Skip to main content

அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

உலகின் பல நாடுகளில், இலட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி பிழைப்புக்காக பல வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கரோனா முடக்கம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.

விமான போக்குவரத்தும்  தடை விதித்துள்ளதால் நாடு திரும்பவும் அவர்களால் முடியவில்லை. எனவே வேலையின்றி, சம்பளமின்றி, உணவுக்கும் வழியின்றி அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து பல மாதங்களாக, பல வேளைகளில் பட்டினி கிடக்கின்றனர்.

இந்நிலையில் அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்,  வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும், தனி அமைச்சகமும் உடனே அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம்  சார்பில் பல்வேறு நாடுகளில் நேற்று இணைய வழியாகவும், அவரவர் இருக்கின்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்துதல் பேரில் அக்கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தமிழ் அமைப்புகள் இணைய வழியாகவும், அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அவரது இல்லத்திலுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில், முக்கிய நிர்வாகிகள் பதாகையேந்தி, சமூக இடைவெளி கடைபிடித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “சில வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற தமிழர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்ப்பதில்லை. மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை. நெருக்கடியான அறைகளில் அடைந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் உயிர் பயத்துடன் நாள்களை கடத்தி வருகின்றனர். இதனால் அயல்நாடுகளில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்துடன் இருக்கின்றனர்.

 

 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

அயல்நாடுகளில் இருந்து கேரளத்திற்கு வருகின்ற விமானங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என கேரள மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு விமானங்கள் வேண்டாம் என தமிழ்நாடு அரசு தடைவிதித்து விட்டது. இதனால் அயல்நாடு வாழ் தமிழர்கள் தாங்க முடியாத வேதனை அடைந்துள்ளனர்.  எனவே அயல்நாடு வாழ் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உடனே விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  மேலும் நெருக்கடி காலத்தில் அவர்களை கட்டணம் இன்றி அழைத்து வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அவர்களுக்கான குவாரண்டைன் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இவைகளை செயல்படுத்த உடனடியாக அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க, தமிழக அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்களை காக்க தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் அவரவர் இல்லங்களில் இருந்தபடி போராட்டம் நடத்தினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.