Skip to main content

ஊரக உள்ளாட்சித் தேர்தல்- அ.தி.மு.க.வில் நாளை முதல் விருப்ப மனு!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

 

tamilnadu local body election admk announcement

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (14/09/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (15/09/2021) முதல் விருப்ப மனு பெறலாம். மாவட்ட அ.தி.மு.க. அலுவலகங்களில் உரியக் கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்கலாம். 

 

மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் விண்ணப்பப் படிவத்திற்கு ரூபாய் 5,000, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் விண்ணப்பப் படிவத்திற்கு ரூபாய் 3,000 கட்டணம் செலுத்த வேண்டும். அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே விருப்ப மனு தந்தவர்கள் அசல் ரசீது, நகலினை சமர்ப்பித்தால் போதும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.       

 

 

சார்ந்த செய்திகள்