தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மே 30- ஆம் தேதி முதல் ஜூன் 5- ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, நெல்லை, பாளையங்கோட்டை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, கோதையார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.