Skip to main content

'இறப்பு, வாரிசு சான்றிதழ் தாமதமின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'- மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

tamilnadu chief secretary wrote letter for all district collectors

 

கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில், "கரோனாவால் உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் தர வேண்டும். உயிரிழந்தவர்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்டவற்றை மருத்துவமனைகள் சரியாக தர வேண்டும். மருத்துவமனைகள் சரியாக விவரம் தராததால் இறப்பு சான்று பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. மருத்துவமனைகள் விவரங்களைச் சரியாக தருகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் தாமதமின்றிக் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்